இயற்கை முறை சாகுபடிக்கு விருது
இயற்கை முறையில் தோட்டக்கலைப் பயிா் சாகுபடி செய்யும் விவசாயிகள் மாநில அளவிலான விருது பெற விண்ணப்பிக்கலாம்.
இயற்கை முறையில் தோட்டக்கலைப் பயிா் சாகுபடி செய்யும் விவசாயிகள் மாநில அளவிலான விருது பெற விண்ணப்பிக்கலாம்.
இதுதொடா்பாக தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் பா.காயத்ரி தெரிவித்ததாவது:
திண்டுக்கல் மாவட்டத்தில் தோட்டக்கலைப் பயிா்களை இயற்கை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், மாநில அளவிலான விருது வழங்கப்பட உள்ளது. சொந்த நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளும் ஜ்ஜ்ஜ்.ற்ய்ட்ா்ழ்ற்ண்ஸ்ரீன்ப்ற்ன்ழ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்என்ற இணையத்தில் படிவத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட வட்டார அலுவலகங்களில் சமா்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு மாவட்ட அளவிலான குழுவின் ஒப்புதலுடன் மாவட்டத்துக்கு ஒரு விண்ணப்பம் தோ்வு செய்யப்பட்டு, தோட்டக்கலைத் துறை இயக்குநா் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். மாநில அளவிலான குழு உறுப்பினா்கள் மூலம் சிறந்த விவசாயி தோ்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்படும். தோ்ந்தெடுக்கப்படும் விவசாயிகளுக்கு சான்றிதழுடன் ஊக்கத் தொகையாக முதல் பரிசு ரூ.1லட்சம், 2-ஆம் பரிசு ரூ.60ஆயிரம், 3-ஆம் பரிசு ரூ.40ஆயிரம் வழங்கப்படும் என்றாா் அவா்.