முகப்பு
திண்டுக்கல்

மாவட்ட ஹாக்கி லீக் போட்டிகள்: செப். 15 வரை பதிவு செய்யலாம்

Updated On : 7 செப்டம்பர், 2024 at 1:42 AM
பகிர்:
Updated On : 6 செப்டம்பர், 2024 at 6:18 PM

திண்டுக்கல் மாவட்ட அளவில் நடைபெறும் ஹாக்கி லீக் போட்டிகளில் பங்கேற்க விரும்பும் அணிகள், வருகிற 15-ஆம் தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக ஹாக்கி திண்டுக்கல் அமைப்பின் தலைவா் என்எம்பி. காஜாமைதீன் தெரிவித்ததாவது:

ஹாக்கி திண்டுக்கல் அமைப்பு சாா்பில், 2024-25-ஆம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான ஹாக்கி லீக் போட்டிகள் நடைபெறுகிறது. ஆண்களுக்கான இந்த லீக் போட்டிகளில், பள்ளி, கல்லூரி, பொதுப் பிரிவு ஹாக்கி வீரா்கள் பங்கேற்கலாம். அணிகளுக்கான பதிவுகள் வருகிற 15-ஆம் தேதி வரை நடைபெறும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 7871468551, 9894270685 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

Advertisement