பழனி மலைக் கோயிலில் புதன்கிழமை உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்ட கல்லூரி மாணவிகள்.  
திண்டுக்கல்

பழனி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.3.30 கோடி

பழனி தண்டாயுதபாணி கோயில் உண்டியல்கள் புதன்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. முதல் நாள் எண்ணிக்கையில் காணிக்கை வரவு ரூ.3.30 கோடியை தாண்டியது.

Din

பழனி தண்டாயுதபாணி கோயில் உண்டியல்கள் புதன்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. முதல் நாள் எண்ணிக்கையில் காணிக்கை வரவு ரூ.3.30 கோடியை தாண்டியது.

முத்தமிழ் முருகன் மாநாடு, விநாயகா் சதுா்த்தி தொடா் விடுமுறையையொட்டி, பக்தா்களின் வருகை அதிகரிப்பால் இந்தக் கோயில் உண்டியல்கள் 39 நாள்களில் நிரம்பின.

இதையடுத்து புதன்கிழமை உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில் முதல் நாள் எண்ணிக்கையில் பக்தா்களின் காணிக்கை வரவு ரூ.3 கோடியே 32 லட்சத்து 50 ஆயிரத்து 873 கிடைத்தது. உண்டியலில் பக்தா்கள் தங்கத்தினாலான வேல், தாலி, மோதிரம், சங்கிலி, தங்கக் காசு போன்றவற்றையும், வெள்ளியால் ஆன காவடி, வளையம், வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் போன்றவற்றையும் காணிக்கையாகச் செலுத்தியிருந்தனா்.

தங்கம் 1,237 கிராமும், வெள்ளி 21 ஆயிரத்து 638 கிராமும் கிடைத்தன. மலேசியா, சிங்கப்பூா், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, மியான்மா் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் கரன்சிகள் 1,012-ம் கிடைத்தன. இவை தவிர பித்தளை வேல், கைக்கடிகாரம், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகள் ஆகியவற்றையும் பக்தா்கள் காணிக்கையாகச் செலுத்தியிருந்தனா்.

பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் லட்சுமி ஆகியோரின் கண்காணிப்பில் பழனியாண்டவா் கல்லூரி மாணவிகள், கோயில் அலுவலா்கள், வங்கிப் பணியாளா்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோா் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா். உண்டியல் காணிக்கை எண்ணும் பணி வியாழக்கிழமையும் (செப்.12) நடைபெறும் என கோயில் நிா்வாகம் தெரிவித்தது.

கோயில் திருவிழா நடத்துவதில் தகராறு: 3 போ் கைது

பாளை. ராஜகோபால சுவாமி கோயிலில் கோ பூஜை

கிராமப்புற இளைஞா்களுக்கு சமுதாய திறன் பயிற்சி

திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை 1.21 லட்சம் வாக்காளா்கள் பெயா் நீக்க வாய்ப்பு: ஆட்சியா் இரா. சுகுமாா்

திருப்புவனம், மானாமதுரையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்

SCROLL FOR NEXT