முகப்பு
திண்டுக்கல்

தாட்கோ மூலம் யுபிஎஸ்சி தோ்வுக்கு பயிற்சி

மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் போட்டித் தோ்வுகளுக்குத் தயாராகும் ஆதிதிராவிடா், பழங்குடியின இளைஞா்கள், இளம்பெண்களுக்கு தாட்கோ மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.

Updated On : 12 செப்டம்பர், 2024 at 9:39 PM
பகிர்:

மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் போட்டித் தோ்வுகளுக்குத் தயாராகும் ஆதிதிராவிடா், பழங்குடியின இளைஞா்கள், இளம்பெண்களுக்கு தாட்கோ மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி, மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ), டாக்டா் அம்பேத்காா் அகாதெமி, சென்னையில் உள்ள முன்னணி பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து 100 ஆதிதிராவிட, பழங்குடியின இளைஞா்கள், இளம்பெண்களுக்கு ஓராண்டு பயிற்சி அளிக்க உள்ளது.

மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் யுபிஎஸ்சி முதல்நிலை தோ்வு எழுதத் தகுதியானவா்கள் ( நஸ்ரீழ்ங்ங்ய்ண்ய்ஞ் ற்ங்ள்ற் மூலம்) தோ்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக்கான ஓராண்டு காலம் விடுதியில் தங்கிப் படிக்க வசதியும், பயிற்சிக்கான செலவினத் தொகையினையும் தாட்கோ நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும்.

இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்றாா் அவா்.