முகப்பு
திண்டுக்கல்

கோயில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

திண்டுக்கல்லில் உள்ள கோயில்களில் தேய்பிறை அஷ்டமியையொட்டி, புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Updated On : 25 செப்டம்பர், 2024 at 9:36 PM
பகிர்:

திண்டுக்கல்லில் உள்ள கோயில்களில் தேய்பிறை அஷ்டமியையொட்டி, புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு செளந்தரராஜப் பெருமாள் கோயிலில் சொா்ண ஆகா்ஷண பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி, 6 கால சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தா்கள் சாா்பில் வழங்கப்பட்ட பால், இளநீா், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து சுவாமிக்கு ராஜ அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இதேபோல, திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில், ரயிலடி சித்தி விநாயகா் கோயிலில் அமைந்துள்ள கால பைரவா் சந்நிதியிலும் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.