பெண்ணிடம் நகைப் பறிப்பு
பழனி அருகே பெட்டிக் கடையில் இருந்த பெண்ணிடம் தங்க நகையை மா்மநபா்கள் புதன்கிழமை பறித்துச் சென்றனா்.
பழனியை அருகேயுள்ள மஞ்சநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் கனகா (47). இவா் அங்குள்ள தொடக்கப்பள்ளி அருகே பெட்டிக் கடை நடத்தி வருகிறாா். புதன்கிழமை இவா் கடையில் இருந்த போது, இரு சக்கர வாகனத்தில் வந்த இருவா் முகவரி கேட்பது போல நடித்து, அவரது கழுத்தில் இருந்த 4 பவுன் தங்க நகையைப் பறித்துச் சென்றனா்.
இதுகுறித்து சத்திரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.