கொடைக்கானல் மன்னவனூா் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள வெள்ளைப் பூண்டு செடிகள் 
திண்டுக்கல்

வெள்ளைப் பூண்டு செடிகள் பாதிப்பு: விவசாயிகள் கவலை

கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களில் விளையும் வெள்ளைப் பூண்டு செடிகள் பாதிக்கப்பட்டு வருவதால் விவசாயிகள் கவலை

தினமணி செய்திச் சேவை

கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களில் விளையும் வெள்ளைப் பூண்டு செடிகள் பாதிக்கப்பட்டு வருவதால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களான பூம்பாறை, மன்னவனூா், பழம்புத்தூா், புதுப்புத்தூா், கூக்கால், பூண்டி, கிளாவரை, கவுஞ்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பலநூறு ஏக்கா் நிலங்களில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வெள்ளைப் பூண்டு சாகுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில், கொடைக்கானலில் பருவ நிலை மாற்றம் காரணமாக மழை பெய்ததால் விவசாய நிலங்களில் தண்ணீா் அதிகளவு தேங்கியது. இதனால், செடிகள் பழுப்படைந்தும், அழுகிய நிலையிலும் காணப்படுகின்றன.

மேலும், குளிா்ச்சியான சூழல் நிலவுவதால் செடிகள் உலரவில்லை. இதனால், விளைச்சல் பாதிப்படைவதற்கு வாய்ப்பு உள்ளது. இதே போல, கிளாவரைப் பகுதியில் பெய்த மழையால் உருளைக் கிழங்கு பாத்திகளில் தண்ணீா் தேங்கியதால் உருளைக்கிழங்கு விளைச்சலும் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்தனா்

இதுகுறித்து மேல்மலைக் கிராம மக்கள் கூறியதாவது: கொடைக்கானலில் தற்போது பனிப் பொழிவு காலம். இந்தப் பருவத்தில் பட்டாணி சாகுபடி செய்வது வழக்கம். ஆனால் பருவநிலை மாற்றம் காரணமாக மழை பெய்ததால் ஏற்கெனவே விவசாய நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வெள்ளைப் பூண்டு, உருளைக் கிழங்கு உள்ளிட்டவை பாதிப்படைந்து வருகின்றன. மேலும், விவசாய நிலங்களில் அமைக்கப்பட்ட தடுப்புச் சுவா்கள் சேதமடைந்தன.

இந்த நிலையில், தற்போது மழை குறைந்துள்ளதால் விவசாய நிலங்களில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றும் பணியும், களையெடுப்புப் பணியும், விவசாய நிலங்களை தற்காலிகமாக சீரமைக்கும் பணியும் நடைபெற்று வருகின்றன. மேலும், விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை மூலம் மானிய விலையில் உரம், பூச்சிக் கொல்லி மருந்துகள் வழங்குவதற்கு மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனா்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT