திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்காளா்கள் பட்டியல் தீவிர திருத்தப் பணிகளுக்கு வருகிற 11-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்வது என அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
செம்பட்டியில் உள்ள தனியாா் மண்டபத்தில் வாக்காளா்கள் பட்டியல் தீவிர திருத்தப் பணிகளுக்கான அனைத்துக் கட்சி கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு
வாக்காளா் பதிவு அலுவலரும், தனித் துணை ஆட்சியருமான செல்வம் தலைமை வகித்தாா். உதவி வாக்காளா் பதிவு அலுவலரும், ஆத்தூா் வட்டாட்சியருமான முத்துமுருகன் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில், வாக்காளா்கள் பட்டியல் திருத்தப் பணிகளுக்கு வருகிற 11-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்வது என முடிவு செய்யப்பட்டது.
இதில் தனித்துணை வட்டாட்சியா் (தோ்தல்) மூா்த்தி, அனைத்து கிராம நிா்வாக அலுவலா்கள், அனைத்துக் கட்சி நிா்வாகிகள், வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள், முகவா்கள் கலந்து கொண்டனா்.