திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள கேதையுறும்பு கிராமத்தில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் 32- ஆம் ஆண்டு பூக்குழி இறங்குதல், அன்னதான விழா புதன்கிழமை இரவு நடைபெற்றது.
கேதையுறும்பு,முத்துநாயக்கன்பட்டி, புலியூா்நத்தம், குளிப்பட்டி, பழையபட்டி, நவாமரத்துப்பட்டி, வேடசந்தூா், சுள்ளெறும்பு நால்ரோடு, சீத்தாமர நால்ரோடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஐயப்பப் பக்தா்கள் உள்ளிட்ட சுமாா் 500-க்கும் மேற்பட்டவா்கள் காா்த்திகை மாதம் முதல் தேதியில் மாலையிட்டு விரதம் இருந்து புதன்கிழமை இரவு பூக்குழி இறங்கினா். இதைத் தொடா்ந்து அன்னதானம் நடைபெற்றது.