பழனியை அடுத்த கீரனூா் பேரூராட்சியில் தொப்பம்பட்டி மத்திய ஒன்றிய திமுக சாா்பில் என் வாக்குச் சாவடி, வெற்றி வாக்குச் சாவடி ஆலோசனைக் கூட்டமும், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் புதன்கிழமை நடைபெற்றன.
இதில் தொப்பம்பட்டி மத்திய ஒன்றியச் செயலா் பொன்ராஜ் வரவேற்றாா். மாவட்ட துணைச் செயலா் ராஜாமணி, முன்னாள் மாவட்டக் குழு உறுப்பினா் கிருஷ்ணன், ஊராட்சி ஒன்றியத் தலைவா் சத்திய புவனா உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா்.
இந்த நிகழ்வில், தமிழக அரசின் நான்காண்டு சாதனை திட்டங்கள் குறித்த பதாகைகள் வைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு அந்தத் திட்டங்களின் பலன்கள் எடுத்துரைக்கப்பட்டன. தொடா்ந்து பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.