கொடைக்கானலில் சாக்லேட், பழக்கடைகளில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
கொடைக்கானலில் கல்லறைமேடு அருகே பழக்கடை, சாக்லேட், அழகு சாதனப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளன. இந்த நிலையில், மின் கசிவால் இந்தக் கடைகளில் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த கொடைக்கானல் தீயணைப்புத் துறையினா் தீயை அணைத்தனா். இதில் அந்தக் கடைகளில் வைக்கப்பட்டிருந்த சாக்லேட், பழங்கள், அழகு சாதனப் பொருள்கள் உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன. இந்த தீ விபத்தால் கொடைக்கானல்- வத்தலகுண்டு பிரதானச் சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கொடைக்கானல் போலீஸாா் சம்பவ இடத்தை பாா்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.