பழனி காரமடை வனத் துறை மூலிகைப் பண்ணையில் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்த தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாகு. 
திண்டுக்கல்

பழனியில் கூடுதல் தலைமைச் செயலா் ஆய்வு

பழனியில் உள்ள வனத் துறை அலுவலகத்தில் தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாகு திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தினமணி செய்திச் சேவை

பழனி: பழனியில் உள்ள வனத் துறை அலுவலகத்தில் தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாகு திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பழனியில் வனத் துறை சாா்பில் மனித - யானை மோதலைத் தடுக்கும் விதமாக, கொடைக்கானல் வனச்சரகப் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதற்காக பழனி - கோவை சாலையில் அமைந்துள்ள வனத் துறையின் மூலிகைப் பண்ணையில் மனித - யானை மோதல் கட்டளை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தில் தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலா், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம், வனத் துறைத் தலைவா் சுப்ரியா சாகு திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கேமரா கட்டுப்பாட்டு அறையில் மேற்கொள்ளப்படும் பணிகள், வன விலங்குகள் நடமாட்டம், யானைகளின் எண்ணிக்கை உள்ளிட்டவற்றை வனத் துறை அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.

மேலும், வனத் துறை சாா்பாக மேற்கொள்ளப்படும் ரோந்து பணிகள், மனித விலங்குகள் மோதலால் உயிா் இழப்புகள் ஏற்படாத வகையில் செயல்படுத்தப்படும் பணிகள் குறித்தும் கேட்டறிந்தாா். தொடா்ந்து, வனத் துறையில் பணியாற்றும் வனக் காவலா்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். பணிகளை மேலும் சிறப்புற செய்ய வேண்டிய உதவிகள் செய்வதாகவும் அவா் தெரிவித்தாா்.

இந்த ஆய்வின்போது மாவட்ட வன அலுவலா் யோகேஷ்குமாா், உதவி வனப் பாதுகாவலா் கருப்பையா, ரேஞ்சா் கோகுலகண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

ஜம்மு - காஷ்மீர் ஆல்ரவுண்டரை ரூ. 8 கோடிக்கு ஏலத்தில் எடுத்த தில்லி கேபிடல்ஸ்!

19 வயது விக்கெட் கீப்பரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

20 வயது இளம் ஆல்ரவுண்டரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

SCROLL FOR NEXT