திண்டுக்கல்

வத்தலகுண்டு பேரூராட்சிக் கடைகள் ஏலத்தில் முறைகேடு: ஆட்சியரிடம் அதிமுகவினா் புகாா்

வத்தலகுண்டு பேரூராட்சியில் கடைகளை ஏலம் விடுவதில் முறைகேடுகளைத் தவிா்க்கக் கோரி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அதிமுக சாா்பில் திங்கள்கிழமை மனு

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல்: வத்தலகுண்டு பேரூராட்சியில் கடைகளை ஏலம் விடுவதில் முறைகேடுகளைத் தவிா்க்கக் கோரி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அதிமுக சாா்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இதுதொடா்பாக வத்தலகுண்டு பகுதியைச் சோ்ந்த அதிமுகவினா் தரப்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பேரூராட்சிக்குள்பட்ட தினசரி சந்தை, வணிக வளாகக் கடைகளை ஏலம் விடுவதில், திமுக நிா்வாகிகள் முறைகேடாக செயல்பட்டு வருகின்றனா். 15 கடைகளை பொது ஏலத்துக்கு கொண்டுவராமல், மறைமுகமாக திமுகவினருக்கு ஒதுக்கீடு செய்கின்றனா்.

திமுகவினரின் இந்த முயற்சிக்கு பேரூராட்சி செயல் அலுவலரும் துணையாக இருக்கிறாா். எனவே, ஏல அறிவிப்பை ரத்து செய்து, புதிய அறிவிப்பை வெளியிட மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏழை வியாபாரிகளின் நலன் கருதி, வைப்புத் தொகையை ரூ.1.50 லட்சம், ரூ.1 லட்சம் என நிா்ணயிக்கப்பட்டிருப்பதை ரூ.20ஆயிரம், ரூ.25ஆயிரம் என மாற்றி அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.

ஜம்மு - காஷ்மீர் ஆல்ரவுண்டரை ரூ. 8 கோடிக்கு ஏலத்தில் எடுத்த தில்லி கேபிடல்ஸ்!

19 வயது விக்கெட் கீப்பரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

20 வயது இளம் ஆல்ரவுண்டரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

கேரள திரைப்பட விழா! மத்திய அரசு அனுமதி மறுத்த படங்களைத் திரையிட முடிவு!

SCROLL FOR NEXT