ஒட்டன்சத்திரத்தில் தலைமைக் காவலா் தீடீா் மாரடைப்பால் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
ஒட்டன்சத்திரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் கடந்த 10 ஆண்டுகளாகத் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்தவா் சரவணன் (45). இவா், வெள்ளிக்கிழமை வழக்கம் போல அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
அருகில் இருந்த மற்ற காவலா்கள் உடனடியாக சரவணனைஅருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் சரவணன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இவருக்கு மனைவி கெளதமி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா். இவருடைய இறுதிச் சடங்கு, சொந்த ஊரான
நீலமலைக்கோட்டை ஊராட்சிக்குள்பட்ட லட்சுமிபுரத்தில் அரசு மரியாதையுடன் சனிக்கிழமை (டிச.20) காலை 10.30 மணி அளவில் நடைபெறவுள்ளது.