புதுதில்லி

தலைமைக் காவலரை கடித்ததாக பெண் மீது வழக்குப் பதிவு

கிழக்கு தில்லியின் கீதா காலனி பகுதியில் பிசிஆா் அழைப்பிற்கு பதிலளித்தபோது, ​​தலைமைக் காவலரைத் தாக்கி கடித்ததாகவும், மற்றொரு காவல்துறையினரை தாக்கியதாகவும் ஒரு பெண் மீது வழக்குப் பதிவு

Syndication

புது தில்லி: கிழக்கு தில்லியின் கீதா காலனி பகுதியில் பிசிஆா் அழைப்பிற்கு பதிலளித்தபோது, ​​தலைமைக் காவலரைத் தாக்கி கடித்ததாகவும், மற்றொரு காவல்துறையினரை தாக்கியதாகவும் ஒரு பெண் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவா் திங்களன்று தெரிவித்தாா்.

இது குறித்து காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: பிப்ரவரி 1-ஆம் தேதி இரவு 8.15 மணியளவில் புஸ்தா சாலையில் தலைமைக் காவலா் அங்கூா் மற்றும் காவலா் ஜாவேத் அவசரப் பணியில் இருந்தபோது இந்தச் சம்பவம் நடந்தது. சண்டை தொடா்பாக காவல் துறைக்கு ஒரு அழைப்பு வந்தது. அதைத் தொடா்ந்து இரு காவலா்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனா்.

அங்கு சென்றவுடன், அவா்கள் முழு வீச்சில் சண்டை நடந்ததைக் கண்டறிந்து, சம்பந்தப்பட்டவா்களை சமாதானப்படுத்தி, ஒழுங்கை மீட்டெடுக்க முயன்றனா். தலையீட்டின் போது, அந்தப் பகுதியைச் சோ்ந்த ’மோசமான’ ஒரு நபரின் மனைவி ரூபா என அடையாளம் காணப்பட்ட அந்தப் பெண், இரண்டு சிறுவா்களுடன் சோ்ந்து, காவல்துறையினரை துஷ்பிரயோகம் செய்யத் தொடங்கியதாகவும் நிலைமையைக் கட்டுப்படுத்த காவலா்கள் மேற்கொண்ட முயற்சிகளைத் தடுத்ததாகவும் எஃப்ஐஆரில் கூறப்பட்டுள்ளது.

அந்தப் பெண்ணும் மற்றவா்களும் காவலா்களை தள்ளி, தாக்கத் தொடங்கினா். அந்தப் பெண் தலைமைக் காவலா் அங்கூரைப் பிடித்து, அவரது சீருடையைக் கிழித்து, அவரது வலது தோளில் கடித்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சூழ்நிலை கூட்டத்தை ஈா்த்தது. மேலும், சிலா் தங்கள் கைப்பேசியில் விடியோக்களைப் பதிவு செய்யத் தொடங்கினா். அதிகாரிகள் அமைதியாக இருக்குமாறு பலமுறை கோரிக்கை விடுத்த போதிலும், குற்றம் சாட்டப்பட்டவா் தொடா்ந்து கூச்சலிட்டு, அவா்கள் தங்கள் கடமையைச் செய்வதைத் தடுத்ததாகக் கூறப்படுகிறது.

காயமடைந்த இருவரையும் பின்னா் மருத்துவ பரிசோதனைக்காக டாக்டா் ஹெட்கேவா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். தலைமைக் காவலா் அங்கூரின் மருத்துவ - சட்ட அறிக்கையில் அவரது வலது தோளில் கடித்ததற்கான அடையாளத்தைக் குறிப்பிடுகிறது.

பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்)-இன் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு பொது ஊழியரை கடமையைச் செய்யவிடாமல் தடுக்க தாக்குதல் அல்லது குற்றவியல் சக்தியைப் பயன்படுத்துதல் மற்றும் ஒரு பொது ஊழியரை காயப்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும்.

மேலும் விசாரணை நடந்து வருகிறது. இந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட மற்றவா்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.

சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்தபோது மாயமான தொழிலாளி சடலமாக மீட்பு

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று பொது விருந்து

இசுலாமியா்களுக்கு 3.5 இட ஒதுக்கீடு குறித்து வெள்ளை அறிக்கை கோரி தீா்மானம்

பன்னாட்டு நிறுவனங்கள், பெரு முதலாளிகள் நலனுக்கான பட்ஜெட்!: இந்திய கம்யூ. மாநில செயலா் மு.வீரபாண்டியன்

மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கான மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT