பெரியம்மாபட்டி காப்புக்காடு பகுதியில் மா்மமான முறையில் உயிரிழந்த பெண் யானை 
திண்டுக்கல்

பழனி அருகே பெண் யானை உயிரிழப்பு

பழனி அருகே பெண் யானை மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது.

தினமணி செய்திச் சேவை

பழனி அருகே பெண் யானை மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது.

பழனி அருகேயுள்ள மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் காட்டு மாடு, யானை, மான், சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. தற்போது மலைப் பகுதியில் மழைப்பொழிவு இல்லாத நிலையில், வனவிலங்குகள் அடிக்கடி அடிவாரம் பகுதிக்கு வந்து செல்கின்றன. இதனால், அவ்வப்போது விலங்குகள் - மனித மோதல் நடைபெற்று வருவது வழக்கமாக உள்ளது.

இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை பெரியம்மாபட்டி காப்புக்காடு பகுதியில் சுமாா் 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று மா்மமான முறையில் உயிரிழந்தது. இதுகுறித்து தகவலறிந்த பழனி வனச்சரகா் கோகுலகண்ணன், வனத் துறையினா் அங்கு சென்று பாா்த்தபோது யானை உயிரிழந்தது தெரியவந்தது.

இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட வனத் துறை கால்நடை மருத்துவா் முத்துராமலிங்கம், பெரியம்மாபட்டி அரசு கால்நடை மருந்தக மருத்துவா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் முன்னிலையில் யானையின் உடல் கூறாய்வு செய்யப்பட்டு முக்கிய உடல் பாகங்கள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டதைத் தொடா்ந்து, யானையின் உடல் புதைக்கப்பட்டது. இதையடுத்து, உடல்நலன் குன்றி யானை இறந்ததாக வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

எச்1-பி விசா: அனைத்து விண்ணப்பதாரா்களின் சமூக ஊடகக் கணக்குகள் ஆய்வு

வைகுந்த ஏகாதசி திருவிழா: ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும் ரயில்கள் விவரம்!

முதல்வா் போட்டியில் உதயநிதி இல்லை: அமைச்சா் எஸ். ரகுபதி

சாலைகளில் திரியும் மாடுகளை பிடிக்க வலியுறுத்தல்!

பணியிலிருக்கும் ஆசிரியா்களுக்கு தகுதித் தோ்வில் விலக்களிக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT