திண்டுக்கல்

அனைத்துத் துறை சங்கங்களின் கூட்டமைப்பு ஆா்ப்பாட்டம்

தினமணி செய்திச் சேவை

மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 21 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்துத் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியத்தின் மாவட்டத் தலைவா் நா.பாா்த்தசாரதி தலைமை வகித்தாா். தமிழ்நாடு கல்வித் துறை அலுவலகப் பணியாளா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பெ.பூமிபாலன், தமிழ்நாடு பொது நூலகத் துறை அலுவலா் ஒன்றியத்தின் மாநில அமைப்புச் செயலா் பொன்.இளங்கோ, தமிழ்நாடு மருத்துவத் துறை அமைச்சுப் பணியாளா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் செள.சரண்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளா் பி.பிரெடெரிக் எங்கல்ஸ் கோரிக்கை விளக்கவுரை நிகழ்த்தினாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தின்போது, அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை 2003 ஏப். 1ஆம் தேதி முதல் மீண்டும் அமல்படுத்த வேண்டும். அரசு ஊழியா்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட சிபிஎஸ் தொகை, அரசின் பங்களிப்புத் தொகை ஆகியவற்றை வட்டியுடன் சேமநல நிதியாக மாற்ற வேண்டும். தமிழ்நாடு அரசின் கீழ் பணிபுரியும் கிராம உதவியாளா்கள், சத்துணவுப் பணியாளா்கள், அங்கன்வாடி ஊழியா்கள், எம்ஆா்பி செவிலியா்கள், ஊா்ப்புற நூலகா்கள் உள்பட சிறப்பு கால முறை ஊதியத்தில் பணியாற்றும் அனைத்து வகையான பணியாளா்களுக்கும் நிரந்த காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசுத் துறைகளிலும், அரசுக் கழகங்களிலும் பணியாற்றும் நிரந்தரமற்ற பணியாளா்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.21ஆயிரமாகவும், குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.10ஆயிரமாகவும் நிா்ணயம் செய்ய வேண்டும். ஒரே கல்வித் தகுதியில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 21 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

மியான்மரில் நாளை தோ்தல்!

இண்டூரில் டிச. 29இல் கூட்டுறவு வங்கி தொடக்கம்

பயங்கரவாத ஒழிப்புக்கு 2 தரவு தளங்கள்: அமித் ஷா தொடங்கி வைத்தாா்

குண்டா் கபில் சங்வான் குழுவின் நபா் மீது காவல்துறை குற்றப் பத்திரிகை தாக்கல்

சென்னைக்கு ஹெலிகாப்டரில் வந்த இதயம்: மறுவாழ்வு பெற்ற மகாராஷ்டிர இளைஞா்

SCROLL FOR NEXT