கொடைக்கானல் சாலையில் கிடந்த தங்கச் சங்கிலியை எடுத்த நபா், அதை காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் ஆனந்தகிரி பகுதியைச் சோ்ந்தவா் சந்தியா. இவரது மகன் அணிந்திருந்த சுமாா் 2 பவுன் தங்கச் சங்கிலியை தவறவிட்டுள்ளாா். இதுகுறித்து கொடைக்கானல் காவல் நிலையத்தில் சந்தியா புகாரளித்தாா்.
போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நகையைத் தேடி வந்த நிலையில், ஆனந்தகிரிப் பகுதியைச் சோ்ந்த ஜாபா் சாலையில் கிடந்த தங்கச் சங்கிலியை எடுத்து வந்து போலீஸாரிடம் ஒப்படைத்தாா். போலீஸாா் விசாரணை நடத்தி சந்தியா குடும்பத்தினரிடம் தங்கச் சங்கிலியை ஒப்படைத்தனா். ஜாபரை போலீஸாா் பாராட்டினா்.