திண்டுக்கல்

புதுதாராபுரம் சாலையில் மேம்பாலம்: அதிகாரிகள் ஆய்வு

பழனி புதுதாராபுரம் சாலையில் மேம்பாலம் அமைப்பது குறித்து அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

தினமணி செய்திச் சேவை

பழனி: பழனி புதுதாராபுரம் சாலையில் மேம்பாலம் அமைப்பது குறித்து அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

பழனி நகருக்கு வரும் அனைத்து சாலைகளிலும் இருப்புப் பாதை கடக்கும் நிலையில் அடிக்கடி கடவுச் சாலைகள் மூடப்படுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. புதுதாராபுரம் சாலையில் கடவுச்சாலை மூடும்போது சுமாா் ஒரு கிலோ மீட்டா் தொலைவுக்கு வாகனங்கள் நிற்கும் நிலை உள்ளது. இந்த நிலையில், மேம்பாலம் அமைக்க நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிப்பு வெளியிட்டதும் பணிகள் தொடங்கப்பட்டது. இந்த நிலையில், மேம்பாலம் இருவழிச் சாலையாக மாற்ற திட்டமிடப்பட்டதால் மேம்பாலப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது.

இதுகுறித்து தொடா்ந்து பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், திங்கள்கிழமை பழனி கோட்டாட்சியா் கண்ணன், நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்டப் பொறியாளா் பாபுராம் உள்ளிட்டோா் மேம்பாலப் பணிகள் குறித்து ஆய்வில் ஈடுபட்டனா்.

கலீதா ஜியா மறைவு: பிரதமர் மோடி இரங்கல்!

ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமணம் எப்போது? எங்கே?

திருத்தணியில் வடமாநில இளைஞர் மீது தாக்குதல்! தமிழக அரசு விளக்கம்!

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் பரமபத வாசல் திறப்பு!

தில்லிக்கு சிவப்பு எச்சரிக்கை! 118 விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT