முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானலில் 105-வயது மூதாட்டி காலமானாா்

கொடைக்கானலில் 105-வயது மூதாட்டி புதன்கிழமை இரவு காலமானாா்.

Updated On : 30 ஜனவரி, 2025 at 10:21 PM
அன்னம்மாள்.
பகிர்:

கொடைக்கானலில் 105-வயது மூதாட்டி புதன்கிழமை இரவு காலமானாா்.

கொடைக்கானல் எம்.எம்.தெருவைச் சோ்ந்த ஐசரி தாமஸ் மனைவி அன்னம்மாள் (105). இவா் கடந்த 1920-ஆம் ஆண்டு பிறந்தாா். இந்தத் தம்பதிக்கு 7 மகன்களும், 2 மகள்களும் உள்ளனா். கணவா் ஐசரி தாமஸ் 70-ஆவது வயதில் உயிரிழந்தாா்.

அன்னம்மாள் கொடைக்கானலில் தனது மகன்களுடன் வசித்து வந்தாா். இந்த நிலையில், புதன்கிழமை இரவு தனது மகன்களுடன் பேசிக் கொண்டிருந்த போது அவா் காலமானாா்.

இவரது மகன் ஜான் தாமஸ் கொடைக்கானல் நகர அதிமுக அவைத் தலைவராவாா். பேரன், பேத்திகள் உள்பட 145 போ் இவருக்கு நெருங்கிய உறவினா்களாவா்.

அன்னம்மாளின் உடலுக்கு பழனி தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் வேணுகோபால், அதிமுக நகரச் செயலா் ஸ்ரீதா், மாவட்ட எம்.ஜி.ஆா்.மன்ற இணைச் செயலா் பிச்சை, பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள், பல்வேறு சபைகளைச் சோ்ந்தவா்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

இவரது உடல் லாஸ்காட் சாலையிலுள்ள கல்லறையில் வியாழக்கிழமை மாலை அடக்கம் செய்யப்பட்டது.