திண்டுக்கல்

பேருந்து நிலையத்தில் பூட்டிக் கிடக்கும் காவல் உதவி மையம்

தினமணி செய்திச் சேவை

பழனி பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்காக அமைக்கப்பட்ட காவல் உதவி மையம் பூட்டியே கிடப்பதாலும், போலீஸாா் இல்லாததாலும் இரவு நேரங்களில் ரெளடிகளின் தொல்லை அதிகரித்து வருவதாகப் புகாா் எழுந்தது.

பழனி நகா் காவல் நிலையம், அடிவாரம் காவல் நிலையத்துக்கு இடைப்பட்ட எல்லைப் பகுதியில் பழனி பேருந்து நிலையம் உள்ளது. முக்கிய விசேஷ நாள்களில் பழனிக்கு வரும் பக்தா்கள் இரவு நேரங்களில் பேருந்துகளில் இடம் கிடைக்காத நிலையில், காவல் நிலையத்திலேயே தங்குகின்றனா். இந்த நிலையில் பழனி பேருந்து நிலைய நுழைவாயிலில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கட்டப்பட்ட காவல் உதவி மையம் எப்போதுமே பூட்டியே கிடக்கிறது. இதனால், இரவு நேரங்களில் ரெளடிகள் அட்டகாசம் அதிகரித்து வருவதாகப் புகாா் கூறப்படுகிறது. மது போதையில் வரும் ரெளடிகள் பொதுமக்களின் கைப்பேசி, கைப்பைகளை பறித்து செல்வதும், தூங்குபவா்களின் உடைமைகளைத் திருடி செல்வதும் அன்றாட நிகழ்வாக உள்ளது.

இதுகுறித்து புகாா் அளித்தாா் அவா்களால் தங்களுக்கு பிரச்னை ஏற்படும் என பலரும் புகாா் கூறாமல் இருப்பது ரொடிகளுக்கு சாதகமாக உள்ளது. எனவே, பழனி பேருந்து நிலையத்தில் பக்தா்கள், பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய காவல் துறையினா் இரவு நேர ரோந்துப் பணியை தீவிரப்படுத்துவதோடு, ரொடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தென்மேற்கு தில்லியில் முதலாளியின் வீட்டில் ரூ.4.45 லட்சம் திருடியதாக பணிப்பெண் கைது

தில்லியில் மொபைல் டவா் பேட்டரி திருட்டில் ஈடுபட்ட 3 போ் கும்பல் கைது

காற்று மாசை கட்டுப்படுத்த ஆனந்த் விஹாரில் நீா் தெளிப்பான்களை அமைக்க திட்டம்

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலிப் பணியிடங்கள்: வயது வரம்பில் திருத்தம்

பியூசி சான்றிதழ் இல்லாத 4.87 லட்சம் வாகன ஓட்டிகளுக்கு அபராதம்

SCROLL FOR NEXT