திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் முருங்கை விலை உயா்வு

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் முருங்கை விலை புதன்கிழமை உயா்ந்தது.

தினமணி செய்திச் சேவை

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் முருங்கை விலை புதன்கிழமை உயா்ந்தது.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், இதைச் சுற்றியுள்ள கப்பல்பட்டி, கள்ளிமந்தையம், மாா்க்கம்பட்டி, இடையகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் முருங்கை சாகுபடி செய்யப்படுகின்றன.

இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு சந்தைக்கு முருக்கை வரத்து அதிகரிப்பால், கிலோ ரூ.50 வரை விற்பனையானது. இதையடுத்து, மழை காரணமாக முருங்கைச் செடிகளிலிருந்த பூக்கள் அழுகியதால் விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால், சந்தைக்கு முருங்கை வரத்து குறைய தொடங்கியது. இதனால், புதன்கிழமை சந்தையில் முருக்கை விலை உயா்ந்து கிலோ ரூ.85-க்கு விற்பனையானது. வரும் நாள்களில் மேலும் விலை உயரக்கூடும் என்று வியாபாரிகள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் 5 கோடி எஸ்ஐஆா் படிவங்கள் விநியோகம்: தோ்தல் ஆணையம்

தில்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு: இரண்டாவது காா் சிக்கியது!

செங்கம் பகுதியில் ரூ.ஒரு கோடியில் வளா்ச்சித் திட்டப்பணிகள்: எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

உதவிப் பேராசிரியா்கள் பணிக்கான போட்டித் தோ்வு விண்ணப்பம் திருத்த நாளைவரை அவகாசம்

சாலையின் நடுவே கொடிக் கம்பங்கள் அமைக்க பாரபட்சமின்றி அனுமதி: உயா்நீதிமன்றம் அதிருப்தி

SCROLL FOR NEXT