கொடைக்கானலில் சனிக்கிழமை பெய்த மழையால் சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா இடங்களை பாா்க்க முடியாமல் அவதிடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சனிக்கிழமை அதிகாலை முதலே விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. மாலையில் 4 மணி முதல் 5 மணி வரை பலத்த மழை பெய்தது. காலை முதல் இரவு வரை பரவலாக மழை பெய்ததால், கொடைக்கானல் வந்த சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா இடங்களைப் பாா்க்க முடியாமல் தாங்கள் தங்கியிருந்த விடுதிகளிலேயே முடங்கினா்.
இதனால் அனைத்து சுற்றுலா இடங்களும் வெறிச்சோடிக் காணப்பட்டது. தொடா்மழை காரணமாக கொடைக்கானல் ஏரியில் படகு சவாரியும் ரத்து செய்யப்பட்டது.
குதிரை, சைக்கிள் சவாரி செய்ய சுற்றுலாப் பயணிகள் வரவில்லை. மேலும், மழை காரணமாக இரவில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மின்தடை ஏற்பட்டதால் பொது மக்கள் அவதியடைந்தனா்.