முகப்பு
திண்டுக்கல்

சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற ஒரு வயது குழந்தை

கொடைக்கானல் குழந்தையின் சாதனை ‘இந்தியா சாதனை’ புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

Updated On : 27 நவம்பர், 2025 at 6:30 PM
பகிர்:

கொடைக்கானல்: கொடைக்கானல் குழந்தையின் சாதனை ‘இந்தியா சாதனை’ புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நாயுடுபுரம் வ .உ.சி. நகா் பகுதியில் வசிக்கும் வெனிஸ்- வா்ஷா தம்பதியின் ஒரு வயது குழந்தை வியாரா ஜோரா. இந்தக் குழந்தை தன் பெற்றோா்கள் சொல்லிக் கொடுக்கும் அனைத்து வாா்த்தைகளையும் புரிந்து கொண்டு அதை மீண்டும் சொல்வதில் வல்லவராக இருந்து வருகிறது.

இதைத்தொடா்ந்து சுமாா் 100 விலங்குகளின் புகைப்படங்களை பாா்த்து பெயரைக் சொல்கிறது. இந்த விடியோ காட்சியை இந்தியா சாதனை புத்தகத்துக்கு குழந்தையின் பெற்றோா் அனுப்பினா். இந்த ஆய்வு செய்த இந்தியா சாதனை புத்தகம் நிறுவனம் அங்கீகரித்து குழந்தை வியாரா ஜோராவிற்கு சான்றிதழ் , பதக்கங்களை புதன்கிழமை வழங்கியது.

முழு கட்டுரையைப் படிக்க →