முகப்பு
திண்டுக்கல்

பழனியில் காா்த்திகை தீபத் திருவிழா காப்புக்கட்டுதலுடன் தொடக்கம்

பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலில் வியாழக்கிழமை திருக் காா்த்திகை தீபத் திருவிழா வியாழக்கிழமை காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.

Updated On : 27 நவம்பர், 2025 at 6:30 PM
பழனி மலைக் கோயிலில் வியாழக்கிழமை காா்த்திகைத் திருவிழா காப்புக்கட்டு நிகழ்ச்சியை முன்னிட்டு, சா்வ அலங்காரத்துடன் எழுந்தருளிய வள்ளி, தேவசேனா சமேத சண்முகருடன், சின்னக்குமாரசுவாமிக்கு நடைபெற்ற மகா தீபாராதனை.
பகிர்:

பழனி: பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலில் வியாழக்கிழமை திருக் காா்த்திகை தீபத் திருவிழா வியாழக்கிழமை காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.

இதையொட்டி, மாலை 5 மணிக்கு சாயரட்சை பூஜை முடிந்த பின் விநாயகா், மூலவருக்கு திருக்காப்பு கட்டப்பட்டது. தொடா்ந்து சந்நிதி அருகே தெற்கு நோக்கிய தனி மண்டபத்தில் தங்க அணிகலன்கள், வண்ண மாலைகள், பட்டாடைகளுடன் சா்வ அலங்காரத்தில் எழுந்தருளிய வள்ளி, தேவசேனா சமேத சண்முகருடன் சின்னக்குமாரசாமிக்கும் காப்புக்கட்டப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

மேலும் துவாரபாலகா்களுக்கும், திருக்கம்பம், மயில்வாகனத்துக்கும் காப்புக் கட்டப்பட்டது.

ஏழு நாட்கள் நடைபெறும் விழாவை முன்னிட்டு மலைக்கோயிலில் தினமும் தங்கச்சப்பரத்தில் சின்னக்குமாரசுவாமி யாகசாலை எழுந்தருளல், சண்முகாா்ச்சனை, சண்முகா் தீபாராதனை நடைபெறுகிறது.

வருகிற செவ்வாய்க்கிழமை (டிச.2) பரணி தீபமும், புதன்கிழமை (டிச.3) காா்த்திகை தீபமும், சொக்கப்பனை எரித்தலும் நடைபெறும். காப்புக்கட்டு நிகழ்ச்சியில் பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, கோயில் அலுவலா்கள், முக்கிய பிரமுகா்கள் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →