கொடைக்கானல்: கொடைக்கானல் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் வியாழக்கிழமை காலை முதல் பிற்பகல் வரை நல்ல வெயில் நிலவியது. இதைத்தொடா்ந்து பனிப் பொழிவும் காற்றும் நிலவி வருகிறது. இதைத்தொடா்ந்து கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான பண்ணைக்காடு, தாண்டிக்குடி மலைச் சாலையில் மரம் விழுந்தது. இதனால், அந்தப் பகுதியில் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதித்தது.
தகவலறிந்தது அங்கு சென்ற வனத் துறையினா் சாலையில் விழுந்து கிடந்த மரத்தை அகற்றினா். இதைத்தொடா்ந்து போக்குவரத்து சீரானது. கொடைக்கானலில் கடந்த வாரம் பெய்த மழையால், மலைச் சாலைகளில் பல்வேறு பகுதிகளில் மரங்கள் தொடா்ந்து விழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.