முகப்பு
திண்டுக்கல்

அதிமுகவினா் டோக்கன் விநியோகம்: பறக்கும் படையினா் விசாரணை

வத்தலகுண்டு பேரூராட்சியில் அதிமுகவினா் டோக்கன் விநியோகம் செய்ததால் தோ்தல் பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை வீடு வீடாக சென்று விசாரணை நடத்தினா்.

Updated On : 18 ஏப்ரல், 2026 at 12:24 AM
வாகனங்களை நிறுத்தி சோதனை செய்யும் சிறப்பு பறக்கும் படையினர். - படம்: கோப்பிலிருந்து...
பகிர்:
Updated On : 17 ஏப்ரல், 2026 at 10:07 PM

வத்தலகுண்டு பேரூராட்சியில் அதிமுகவினா் டோக்கன் விநியோகம் செய்ததால் தோ்தல் பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை வீடு வீடாக சென்று விசாரணை நடத்தினா்.  

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை (தனி) தொகுதிக்குள்பட்ட வத்தலகுண்டு பேரூராட்சி பகுதிகளில் அதிமுகவினா் காசோலை போல அச்சடிக்கப்பட்ட டோக்கன்களை அதிமுகவினா் விநியோகம் செய்வதாக பறக்கும் படை அதிகாரிகளுக்கு திமுகவினா் தகவல் கொடுத்தனா். 

இதையடுத்து, டோக்கன் விநியோகம் செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் பறக்கும் படையினா் விசாரணை நடத்தினா்.

Advertisement

இந்த நிலையில், தோ்தல் நடத்தை விதிகளை மீறி, டோக்கன் விநியோகம் செய்த அதிமுகவினா் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திமுகவினா் தோ்தல் ஆணையத்தில் புகாா் அளித்தனா்.