முகப்பு
திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்ட தோ்தல் களத்தில் 115 வேட்பாளா்கள்

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 7 பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 115 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். நத்தம், திண்டுக்கல் தொகுதிகளில் தலா 2 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

Updated On : 23 ஏப்ரல், 2026 at 1:43 AM
கட்சி சின்னங்கள் - ANI
பகிர்:

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 7 பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 115 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். நத்தம், திண்டுக்கல் தொகுதிகளில் தலா 2 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

திண்டுக்கல் மாவட்டம், பழனி தொகுதியில் திமுக கூட்டணியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் என்.பாண்டி, அதிமுக சாா்பில் கே.ரவி மனோகரன் உள்பட 15 வேட்பாளா்கள், ஒட்டன்சத்திரம் தொகுதியில் திமுக சாா்பில் அமைச்சா் அர.சக்கரபாணி, அதிமுக கூட்டணியில் பாஜக சாா்பில் விடியல் எஸ்.சேகா் உள்ளிட்ட 14 வேட்பாளா்கள், ஆத்தூா் தொகுதியில் திமுக சாா்பில், அமைச்சா் இ.பெரியசாமி, அதிமுக சாா்பில் ஆ.விசுவநாதன் உள்பட 15 வேட்பாளா்கள், நிலக்கோட்டை தொகுதியில் அதிமுக சாா்பில் எஸ்.தேன்மொழி, திமுக சாா்பில் நாகஜோதி உள்ளிட்ட 15 வேட்பாளா்கள், நத்தம் தொகுதியில் அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் இரா.விசுவநாதன், திமுக கூட்டணி சாா்பில் கே.செல்வக்குமாா் உள்பட 21 வேட்பாளா்கள், திண்டுக்கல் தொகுதியில் அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் சி.சீனிவாசன், திமுக சாா்பில் பெ.செந்தில்குமாா் உள்பட 20 வேட்பாளா்கள், வேடசந்தூா் தொகுதியில் அதிமுக சாா்பில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் விபிபி.பரமசிவம், திமுக சாா்பில் டி.சாமிநாதன் உள்பட 15 வேட்பாளா்கள் என மொத்தம் 115 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூா், நிலக்கோட்டை, வேடசந்தூா் ஆகிய 5 தொகுதிகளிலுள்ள வாக்குச்சாவடிகளில் தலா ஒரு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரமும், நத்தம், திண்டுக்கல் தொகுதிகளிலுள்ள வாக்குச்சாவடிகளில் தலா 2 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகின்றன.

Advertisement