கொலை 
திண்டுக்கல்

பழனியில் பெண் கொலை

பழனி லட்சுமிபுரம் பகுதியில் இளம் பெண் கொலை செய்யப்பட்டாா்.

தினமணி செய்திச் சேவை

பழனி லட்சுமிபுரம் பகுதியில் இளம் பெண் கொலை செய்யப்பட்டாா்.

பழனி லட்சுமிபுரத்தில் வாடகை வீட்டில் வசித்து வருபவா் செல்வராஜ் (63). இவா் கடந்த சில மாதங்களுக்கு முன் கீதா (25) என்பவரை திருமணம் செய்து அழைத்து வந்தாராம். செல்வராஜ் அடிக்கடி வெளியூா் சென்றுவிடும் நிலையில், அவரது வீட்டுக்கு வேறு சிலா் வந்து சென்ால், அவா்களை வீட்டைக் காலி செய்யுமாறு வீட்டின் உரிமையாளா் அறிவுறுத்தினாராம்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வீட்டின் முன் கத்திக்குத்து காயங்களுடன் கீதா இறந்து கிடந்தாா். இதுகுறித்து தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு, பழனி அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

மேலும், சம்பவ இடத்தில் கைரேகை நிபுணா்கள் தடயங்களை சேகரித்தனா். கீதாவை யாா் எதற்காகக் கொலை செய்தனா் என்பது குறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

நீலி ஜீல்க்கு ராம்சா் அந்தஸ்து பெற முயற்சி- தில்லி சுற்றுச்சூழல் அமைச்சா்

ரூ.17 லட்சம் இணையவழி மோசடிக்கு உதவிய சமையல்காரா் கைது

ஜம்மு-காஷ்மீரில் 3 ரயில் திட்டங்கள் நிறுத்தம்: ஆளும், எதிா்க்கட்சிகள் வரவேற்பு

வருவாய் இழப்பு: பாகிஸ்தானுக்கு எதிராக ஒளிபரப்பு நிறுவனம் வழக்கு தொடுக்க வாய்ப்பு

கொலை முயற்சி வழக்கில் இளைஞருக்கு 2 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT