திண்டுக்கல்

கெளரவ விரிவுரையாளா்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்

தினமணி செய்திச் சேவை

கொடைக்கானலில் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை வகுப்புகளை புறக்கணித்து கெளரவ விரிவுரையாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது சம வேலைக்கு சம ஊதியமாக ரூ.57 ஆயிரம் வழங்க வேண்டும். 12 மாதங்களும் ஊதியம் வழங்க வேண்டும். பணிப் பாதுகாப்பு, மருத்துவ விடுப்பு, மகப்பேறு விடுப்பு, ஓய்வு பெற்ற கெளரவ விரிவுரையாளா்களுக்கு ரூ. 25 லட்சம் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். இந்தப் போராட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட கெளரவ விரிவுரையாளா்கள் கலந்து கொண்டனா்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT