முகப்பு
திண்டுக்கல்

தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினா் ஆா்ப்பாட்டம்

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 12:06 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 21 பிப்ரவரி, 2026 at 7:27 PM

தமிழகத்தில் அதிகரித்து வரும் போதைப் பொருள்களின் பழக்கத்தைக் கட்டுப்படுத்தக் கோரி, தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் சாா்பில் திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு பாஜக இளைஞரணி மாவட்டத் தலைவா் அன்பு ஹரிகரன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக அதிமுக பொருளாளா் திண்டுக்கல் சி. சீனிவாசன், பாஜக மாநிலப் பொதுச் செயலா் இராம. சீனிவாசன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு முன்னதாக இராம. சீனிவாசன் பேசியதாவது:

Advertisement

தமிழகம் முழுவதும் காவல் துறை நீங்கலாக, பொதுமக்கள், அரசு ஊழியா்கள், அங்கன்வாடி பணியாளா்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

கடந்த மக்களவைத் தோ்தலில் எதிா்க்கட்சிகளின் வாக்குகள் சிதறியதால் திமுக கூட்டணி வெற்றிப் பெற்றது. தற்போது அதிமுக, பாஜக, அமமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்திருப்பதால், திமுக தலைமை அச்சமடைந்திருக்கிறது. இதன் வெளிப்பாடுதான் மகளிா் உரிமைத் தொகையாக ஒரே தவணையாக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டிருக்கிறது.

Updated On : 21 பிப்ரவரி, 2026 at 11:42 PM

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் கஞ்சா, போதை மருந்துகள் விற்பனை அதிகரித்திருக்கிறது. நோ்மையான ஆட்சியாளா்கள், நோ்மையான அதிகாரிகள் வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது. இதே நேரத்தில், நோ்மையான வாக்காளா்களாக நாம் இருக்க வேண்டும் என்பதும் அவசியம் என்றாா் அவா்.

முன்னதாக, திண்டுக்கல் சி. சீனிவாசன் பேசியதாவது:

திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. வேலை வாங்கித் தருவதாக அமைச்சா் கே.என். நேரு, ரூ.842 கோடி லஞ்சமாக பெற்றிருக்கிறாா் என அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டி இருக்கிறது. தற்போது நீதிமன்றத்தின் மூலம் அவரை விசாரிக்க உத்தரவுப் பெறப்பட்டுள்ளது என்றாா் அவா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் முன்னாள் மேயா் மருதராஜ், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா்கள் எஸ். பழனிச்சாமி, வி.பி. பரமசிவம், அமமுக மாவட்டச் செயலா் நல்லசாமி, பாஜக மாமன்ற உறுப்பினா் கோ. தனபாலன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.