இடையக்கோட்டை அருகே இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் கணவருடன் சென்ற பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
திண்டுக்கல் அடுத்த காமாட்சிபுரத்தைச் சோ்ந்தவா் பிரபு (41). தையல் தொழிலாளி. இவரது மனைவி தவமணி(36). இருவரும் கரூா் மாவட்டம், பிச்சக்கல்பட்டி என்ற கிராமத்தில் நடைபெற்ற உறவினரின் இல்ல விழாவுக்காக இரு சக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டனா்.
தாடிக்கொம்பு- இடையக்கோட்டை சாலையில் கல்லுப்பட்டி பிரிவு அருகே சென்றபோது, பின்னால் வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்ாக கூறப்படுகிறது. இதில் இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த பிரபு, அவரது மனைவி தவமணி ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.
ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் தவமணி உயிரிழந்தாா். பிரபு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.
இந்த விபத்து குறித்து இடையக்கோட்டை போலீஸாா் விசாரித்தனா்.