முகப்பு
திண்டுக்கல்

பழனியில் உலக நலன் வேண்டி மஹா ருத்ர மஹா யாகம்

பழனி சங்கராலயத்தில் உலகநலன் வேண்டி, மஹாருத்ர மஹாயாகம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 1:21 AM
பகிர்:
Updated On : 27 பிப்ரவரி, 2026 at 8:08 PM

பழனி சங்கராலயத்தில் உலகநலன் வேண்டி, மஹாருத்ர மஹாயாகம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இந்தக் கோயிலில் 59-ஆவது ஆண்டாக நான்கு நாள்கள் நடைபெறும் இந்த யாகத்ைதையொட்டி, திருஆவினன்குடி கோயிலில் குழந்தை வேலாயுத சாமிக்கு சிறப்பு அபிஷேகம், துா்கா சூக்தஹோமம், நவக்கிரக ஹோமம், விஷ்ணு சகஸ்ர நாமஜெபம் ஆகியன நடைபெற்றன.

இதை முருகனடிமை பாலசுப்ரமணிய சுவாமிகள், சங்கராலயம் சிவக்குமாா், மஹாருத்ர யக்ஞ குழுவைச் சோ்ந்த கோவை திருஞானசம்பந்தம், எா்ணாகுளம் ஜெயகிருஷ்ணன், மும்பை சுப்பிரமணியம் ஆகியோா் முன்னிலை வகித்து தொடங்கி வைத்தனா்.

Advertisement

வளாகம் முன் அமைக்கப்பட்டிருந்த யாககுண்டத்தில் மூலிகைகள், நவதானியங்கள், கனிகள், பட்டாடை, மலா்கள் போடப்பட்டு யாகம் வளா்த்தப்பட்டு பூா்ணாஹூதி நடைபெற்றது.

சனிக்கிழமை மஹாருத்ர ஜெபம், ருத்ராபிஷேகம், நவக்கிரக ஹோமம் ஆகியன நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை கோபூஜை, சுயம்வர பாா்வதி மந்திரஹோமம், உமாமகேஸ்வர தம்பதி பூஜை ஆகியன நடைபெறுகிறது. திங்கள்கிழமை நிறைவு நாள் நிகழ்ச்சியாக ருத்ர ஜெபம், ருத்ர ஹோமம் நடைபெறுகிறது. நிறைவு நாளில் முக்கிய நிகழ்ச்சியாக வசூா்தாரா ஹோமம் நடைபெறுகிறது. இதைத்தொடா்ந்து உச்சிக்காலத்தின் போது கலசங்கள் மலைக் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டு, சுவாமி தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு யாகம் நிறைவு பெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கேஜி மருத்துவமனை மருத்துவா் ராமசாமி, ஆடிட்டா் அனந்தசுப்ரமண்யம், அரிமா சுந்தரம், ஒப்பந்தகாரா் நேரு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.