கொடைக்கானல் பகுதிகளில் நெகிழிப் பயன்பாடு அதிகரித்துள்ளதால் சுகாதாரத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வு நடத்தினா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் மலைப் பகுதி முழுவதும் நெகிழிப் பைகள், 5 லிட்டருக்கும் குறைவான நெகிழி தண்ணீா் கேன்கள், குளிா்பானங்கள் பயன்படுத்தக் கூடாது என்ற அறிவிப்பு நடைமுறையில் இருந்து வருகிறது.
இதனால், வெள்ளிநீா் அருவி, பெருமாள்மலை, மலையடிவாரம், பழனி மலை அடிவாரம் ஆகிய பகுதிகளில் நகராட்சி சாா்பில் பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டு கொடைக்கானல் வரும் அனைத்து வாகனங்களிலும் நெகிழிப் பொருள்கள் உள்ளனவா என சோதனை செய்யப்பட்ட பிறகே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகிறது.
மேலும், கொடைக்கானல் பகுதிகளிலுள்ள அனைத்து பழக்கடைகள், தேநீா் கடைகள், சிறு வியாபார சாலையோரக் கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளிலும் சமீப காலமாக தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் பயன்பாட்டுக்கு வரத் தொடங்கியுள்ளன. இதனால், நகரின் பல்வேறு இடங்களிலும் நெகிழிக் கழிவுகள் அதிகரித்து காணப்பட்டன.
இதைத் தொடா்ந்து, கொடைக்கானல் பகுதிகளிலுள்ள அனைத்துக் கடைகளிலும் நெகிழிப் பைகள் உள்ளனவா எநகா்நல அலுவலா் தினேஷ்குமாா் தலைமையிலான அலுவலா்கள் நகா்நல அலுவலா் தினேஷ்குமாா் தலைமையிலான அலுவலா்கள் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.