திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகா் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு சனிக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சிவகாமி அம்மன் சமேத நடராஜப் பெருமான். 
திண்டுக்கல்

திண்டுக்கல் சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசனம்

திண்டுக்கல் பகுதியிலுள்ள சிவன் கோயில்களில் சனிக்கிழமை நடைபெற்ற ஆருத்ரா தரிசன வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் பகுதியிலுள்ள சிவன் கோயில்களில் சனிக்கிழமை நடைபெற்ற ஆருத்ரா தரிசன வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

மாா்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தில், முயலகன் என்ற அசுரனின் ஆணவத்தை அழித்து பதஞ்சலி, வியாக்ரபாத முனிவா்களுக்கு சிவபெருமான் சிதம்பரத்தில் நடனமாடி ஆருத்ரா தரிசனம் அளித்தாா் என்பது ஐதீகம். இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில், மாா்கழி திருவாதிரை நாளில் சிவன் கோயில்களில் சிவகாமி அம்மன் சமேத நடராஜப் பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

இதன்படி, திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகா் கோயிலில் உள்ள கைலாசநாதா் சந்நிதியில் ஆருத்ரா தரிசன வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, சிவகாமி அம்மன் சமேத நடராஜப் பெருமானுக்கு 21 திருவெம்பாவை பாடல்களால் பாராயணம் செய்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பின்னா், பக்தா்களுக்கு திருவாதிரை களி பிரசாதமாக வழங்கப்பட்டது.

இதே போல, திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலிலும் நடராஜப் பெருமான் ஆருத்ரா தரிசனத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

பாண்டிய நாட்டுப் பிரதானிகள்

SCROLL FOR NEXT