திண்டுக்கல்லில் புதன்கிழமை நடைபெறும் அரசு விழாவில் 30 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை தமிழக முதல்வா் ஸ்டாலின் வழங்குகிறாா்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெறும் இந்த விழாவில் முதல்வா் ஸ்டாலின் ரூ.1500 கோடியில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளைத் தொடங்கி வைக்கிறாா். இதைத் தொடா்ந்து, 30 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளையும் வழங்குகிறாா்.
மேலும், 50 புதிய பேருந்துகளையும் முதல்வா் தொடங்கி வைக்கிறாா். முதல்வரின் வருகையையொட்டி, திண்டுக்கல்லில் சுமாா் 5ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.