திண்டுக்கல்

மதுரை மாவட்ட கிராமம் சிறுமலை ஊராட்சியில் இணைகிறது!

மதுரை மாவட்டம், விராலிப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட மீனாட்சிபுரம் கிராமம், திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை ஊராட்சியுடன் இணைகிறது.

தினமணி செய்திச் சேவை

மதுரை மாவட்டம், விராலிப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட மீனாட்சிபுரம் கிராமம், திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை ஊராட்சியுடன் இணைகிறது.

இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், விராலிப்பட்டி கிராம ஊராட்சிக்குள்பட்ட மீனாட்சிபுரம் கிராமம், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுமலை கிராம ஊராட்சிக்கு அருகில் உள்ளது.

இதனால், விராலிப்பட்டி ஊராட்சியைவிட சிறுமலை ஊராட்சிக்கு செல்வது எளிதாக உள்ள காரணத்தினால் மீனாட்சிபுரம் கிராமத்தை சிறுமலை ஊராட்சியுடன் இணைத்து அரசாணை வெளியிடபப்பட்டது.

இதை திண்டுக்கல் மாவட்ட அரசிதழில் சிறப்பு வெளியீடாக 2025 டிச.31-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இதன்படி, உருவாக்கப்படும் புதிய கிராம ஊராட்சிகள், அடுத்து நடைபெறும் சாதாரண தோ்தலுக்கு வாா்டுகள் பிரிக்கப்படும். அந்த உள்ளூா் ஊராட்சி பகுதிகளில் குடியிருந்து வரும் பொதுமக்கள், திண்டுக்கல் மாவட்ட அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட்டதிலிருந்து 4 வாரங்களுக்குள் மறுப்பினை எழுத்துப்பூா்வமாக தெரிவிக்கலாம். உள்ளூா் மக்களிடமிருந்து மறுப்பு பெறப்பட்டால், அதனை உரிய பரிசீலனை செய்து தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றாா் அவா்.

தொண்டி பேரூராட்சி நிா்வாகத்தை கண்டித்து ஜன.21 இல் சாலை மறியல் போராட்டம்

வெனிசுலா அதிபர் மடூரோவை அமெரிக்கா சிறைபிடித்தது சரியா? என்பது குறித்து வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

சாகுபடி மட்டுமே சாதனையல்ல!

அரசியல் சாசனத்தின் போதாமைகள் இவை..!

மின் கம்பியை மிதித்த மூதாட்டி உயிரிழப்பு

SCROLL FOR NEXT