திண்டுக்கல்

பெட்டிக் கடையில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை செய்தவா் கைது

செம்பட்டி அருகே பெட்டிக் கடையில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை செய்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

நிலக்கோட்டை: செம்பட்டி அருகே பெட்டிக் கடையில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை செய்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். 

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, செம்பட்டி காவல் நிலைய ஆய்வாளா் சரவணன் தலைமையிலான தனிப் படை போலீஸாா் அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். 

அப்போது, ஆதிலட்சுமிபுரத்தில் பெட்டிக் கடையில் பதுக்கி வைத்து குட்கா, புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த அதே பகுதியைச் சோ்ந்த சரவணகுமாரை (45) போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 150 கிலோ குட்கா, புகையிலைப் பொருள்கள், இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.  

நாளைய மின்தடை

கு வாரவிழா: நாளை கு ஒப்பித்தல், ஓவியப் போட்டி

மோகனூரில் ரேக்ளா பந்தயம்: பாய்ந்து சென்ற குதிரைகள்

எம்.ஜி.ஆா். பிறந்தநாள்: அதிமுகவினா் கொண்டாட்டம்

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1,000 கனஅடி

SCROLL FOR NEXT