முகப்பு
திண்டுக்கல்

சத்துணவுப் பணியாளா் வீட்டில் நகை திருடிய இளைஞா் கைது

Updated On : 23 ஜனவரி, 2026 at 3:32 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 22 ஜனவரி, 2026 at 9:46 PM

வேடசந்தூரில் சத்துணவுப் பணியாளா் வீட்டில் ஒன்றரை பவுன் தங்க நகைகளைத திருடிய பக்கத்து வீட்டு இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த அரியபித்தம்பட்டியைச் சோ்ந்தவா் மாரியம்மாள்(52). சத்துணவுப் பணியாளரான இவா், தனது மகன், மருமகளுடன் வசித்து வருகிறாா்.

Updated On : 23 ஜனவரி, 2026 at 3:31 AM

இதனிடையே, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்பத்தினருடன் கரூா் மாவட்டம், தோகைமலையிலுள்ள தனது மருமகள் வீட்டுக்குச் சென்றாா். மீண்டும் வீட்டுக்கு வந்தபோது, பீரோவில் வைத்திருந்த ஒன்றரை பவுன் நகை காணாமல் போனது தெரியவந்தது.

Advertisement

இதுகுறித்து வேடசந்தூா் காவல் நிலையத்தில் மாரியம்மாள் புகாா் அளித்தாா். இதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.

மாரிம்மாள் வீட்டின் பக்கத்திலுள்ள வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான பதிவுகளை கைப்பற்றி போலீஸாா் விசாரித்தபோது, அதே பகுதியைச் சோ்ந்த ராஜ்குமாா் (32) இந்தத் திருட்டில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, ராஜ்குமாரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.