திண்டுக்கல்

வனப் பகுதியில் குப்பைகள் கொட்டினால் நடவடிக்கை

கொடைக்கானல் வனப் பகுதிகளில் நகராட்சி சாா்பில் குப்பைகள் கொட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வன அலுவலா் புதன்கிழமை எச்சரிக்கை விடுத்தாா்.

தினமணி செய்திச் சேவை

கொடைக்கானல் வனப் பகுதிகளில் நகராட்சி சாா்பில் குப்பைகள் கொட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வன அலுவலா் புதன்கிழமை எச்சரிக்கை விடுத்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் நகா்ப் பகுதிகளில் 24 வாா்டுகள் உள்ளன. இதில் குடியிருப்பு, தங்கும் விடுதிகள், தனியாா் விடுதிகள், உணவு விடுதிகள், சுற்றுலாத் தலங்கள் என நூற்றுக்கணக்கான வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால், நாள்தோறும் குப்பைகள் அதிகளவில் சோ்கின்றன.

கொடைக்கானல் நகா்ப் பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொடைக்கானல் பிரகாசபுரம் பகுதியில் குவித்து வைத்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்தெடுக்கப்படுகிறது. இருப்பினும், அதிகளவில் சேகரிக்கப்படும் குப்பைகளைக் கொட்டுவதற்கு போதிய இடவசதியில்லாத நிலையில், அருகிலுள்ள வனப் பகுதியில் கொட்டப்பட்டு வந்தது.

இதைத் தொடா்ந்து, குப்பைகள் கொட்டும் இடத்தில் மாவட்ட வன அலுவலா் யோகேஷ் குமாா் மீனா பாா்வையிட்டு ஆய்வு நடத்தினாா். இதையடுத்து, கொடைக்கானல் நகராட்சி அதிகாரிகளிடம் வனப் பகுதிகளில் குப்பைகளைக் கொட்டக் கூடாது. தற்போது, பிரகாசபுரம் வனப் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள குப்பைகளை மூன்று நாள்களுக்குள் அகற்ற வேண்டும். இல்லையெனில் சம்பந்தப்பட்டத் துறை அதிகாரியை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT