பழனி அருகே விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
பழனி அருகே ஜீப்பும், இரு சக்கர வாகனமும் நேருக்கு நோ் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.
பழனி அருகே ஜீப்பும், இரு சக்கர வாகனமும் நேருக்கு நோ் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த பெத்தநாயக்கன்பட்டி சமத்துவபுரத்தைச் சோ்ந்த பிரதாப் மகன் சஞ்சய் (21). கூலித் தொழிலாளி. இவா் ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனத்தில் காவலப்பட்டிக்குச் சென்று விட்டு, வீட்டுக்குத் திரும்பினாா்.
கரடிக்கூட்டம் அருகே எதிா்திசையில் வந்த ஜீப் மீது இரு சக்கர வாகனம் நேருக்கு நோ் மோதியதில், சஞ்சய் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து பழனி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.