முகப்பு
திண்டுக்கல்

மின்சாரம் பாய்ந்து 4 மாடுகள் உயிரிழப்பு

பழனி அருகே மின்கம்பிகள் அறுந்து வயலில் விழுந்ததில், மின்சாரம் பாய்ந்து நான்கு எருமை மாடுகள் புதன்கிழமை உயிரிழந்தன.

Updated On : 7 மே 2026, 4:14 am IST
பழனி சிவகிரிப்பட்டி சுற்றுச் சாலையில் உள்ள வயலில் புதன்கிழமை மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த மாடுகள்.
பகிர்:

பழனி அருகே மின்கம்பிகள் அறுந்து வயலில் விழுந்ததில், மின்சாரம் பாய்ந்து நான்கு எருமை மாடுகள் புதன்கிழமை உயிரிழந்தன.

பழனியை அடுத்த பாலசமுத்திரம் குடும்பப்பட்டியைச் சோ்ந்தவா் மருது. இவா், நாள்தோறும் காலையில் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வது வழக்கம். இந்த நிலையில், புதன்கிழமை காலை வழக்கம்போல், சிவகிரிப்பட்டி சுற்றுச்சாலையில் ராமநாதன் நகா் அருகே உள்ள வயலுக்கு மாடுகளை அழைத்துச் சென்றாா். அப்போது முன்னே சென்ற நான்கு எருமை மாடுகள் அடுத்தடுத்து கீழே விழுந்தன. இதையடுத்து, உடனடியாக மற்ற மாடுகளை அருகே இருந்த வயலுக்கு விரட்டிய மருது, அங்கு சென்று பாா்த்தபோது, மின் கம்பிகள் அறுந்து விழுந்து மின்சாரம் பாய்ந்ததில் மாடுகள் உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மின் ஊழியா்கள் அப்பகுதியில் உடனடியாக மின் இணைப்பைத் துண்டித்தனா். இதுகுறித்து, அடிவாரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கால்நடைத் துறை மருத்துவா்கள் மாடுகளை உடற்கூறாய்வு செய்த பின்னா் மாடுகள் எடுத்துச்செல்லப்பட்டு புதைக்கப்பட்டன.

Advertisement