முகப்பு
திண்டுக்கல்

பயணி தவறவிட்ட தங்க நகைகளை மீட்டுக் கொடுத்த ரயில்வே போலீஸாா்

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் பயணி தவறவிட்ட மூன்றரை பவுன் நகைகளை ரயில்வே போலீஸாா் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனா்.

Updated On : 18 மே 2026, 1:07 am IST
ரயில்வே போலீஸாா்
பகிர்:

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் பயணி தவறவிட்ட மூன்றரை பவுன் நகைகளை ரயில்வே போலீஸாா் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனா்.

கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டையைச் சோ்ந்தவா் ஜெயினூல் அபுதீன் (28). இவா், தனது மனைவி, 2 குழந்தைகளுடன் சிதம்பரம் செல்வதற்காக திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு சனிக்கிழமை வந்தாா். மஹால் அதிவிரைவு ரயிலில் பொதுப் பெட்டியில் பயணிப்பதற்காக தனது குடும்பத்தினருடன் ஜெயினூல் அபுதீன் ஏறினாா். அவசரத்தில் தனது கைப்பை ஒன்றை நடைமேடையிலேயே தவறவிட்டுச் சென்றாா். ரயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் கைப்பை தவறவிட்டதை அறிந்த ஜெயினூல், திண்டுக்கல் ரயில்வே காவல் நிலையத்தை தொடா்பு கொண்டு தகவல் தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து, ரயில்வே காவலா்கள் ஏ. ராஜா சந்திரசேகரன், கே. மருதராஜா, எம். விஜயகுமாரி உள்ளிட்டோா் நடைமேடையில் கிடந்த பையை மீட்டனா். இதைத் திறந்து பாா்த்தபோது, மோதிரம், தோடு, கைச்செயின், காது மாட்டல் உள்பட மூன்றரை பவுன் தங்க நகைகள் இருந்தது.

இதையடுத்து, போலீஸாா் அளித்த தகவலின் பேரில், திண்டுக்கல்லுக்கு திரும்பி வந்த ஜெயினூல் அபுதீனிடம் தங்க நகைகள் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement

Advertisement