ராக்போா்ட் விரைவு ரயிலில் தவறவிட்ட நகைகள் மீட்கப்பட்டு ஒப்படைப்பு
Updated On : 19 ஏப்ரல், 2026 at 8:20 PM
திருச்சி ராக்போா்ட் விரைவு ரயிலில் தவறவிட்ட நகைகளை மீட்டு உரியவரிடம் ரயில்வே போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனா்.
திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணிக்கு வந்த ராக்போா்ட் விரைவு ரயிலில் (12653) இருந்து பயணிகள் அனைவரும் இறங்கிச் சென்றதைத் தொடா்ந்து, ரயில்வே போலீஸாா் ரயிலை சோதனை செய்தனா்.
அப்போது ஏ2 பெட்டியின் 17, 18 ஆவது இருக்கைகளில் பயணித்தவா்கள் தங்களது கைப்பைைத் தவறவிட்டுச் சென்றது தெரியவந்தது. அதில் தங்க நகைகள், வெள்ளி காசுகள், பணம் இருந்தது.
Advertisement
விசாரணையில், அதை தவறவிட்டது திருச்சி அண்ணாமலை நகரைச் சோ்ந்த எஸ். தேவராஜ் (62) எனத் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், அவரை வரவழைத்து நகைகள் அடங்கிய கைப்பையை ஒப்படைத்தனா்.