முகப்பு
திண்டுக்கல்

பழனியில் அதிவேகத்தில் செல்லும் ஆட்டோக்கள்: பொதுமக்கள் அச்சம்

பழனி ரயிலடி சாலையில் ஆட்டோக்களின் வேகப்போட்டியால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

Updated On : 28 மே 2026, 3:46 am IST
ஆட்டோ - கோப்புப்படம்.
பகிர்:

பழனி ரயிலடி சாலையில் ஆட்டோக்களின் வேகப்போட்டியால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

பழனி ரயில் நிலையத்திற்கு நாள்தோறும் திருச்செந்தூா், பாலக்காடு, ராமேசுவரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ரயில்களில் ஆயிரக்கணக்கானோா் வருகின்றனா். இவா்கள் சுமாா் 2 கி.மீ. தொலைவிலுள்ள அடிவாரம், பேருந்து நிலையத்துக்கு செல்ல போதிய பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. இதனால் ஏராளமான ஆட்டோக்கள் ரயில் நிலையம் முன்பு நிறுத்தி வைக்கப்படுகின்றன.

இந்த ஆட்டோக்களில் அடிவாரம், கிரிவீதி, பேருந்து நிலையம் செல்வோரை ஆட்டோ ஓட்டுநா்கள் ஏற்றிக்கொண்டு அதிவேகத்தில் இயக்குகின்றனா். இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் ரயிலடிச் சாலையை பயன்படுத்தும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

Advertisement

Advertisement

விபத்து ஏற்படுத்தும் ஆட்டோ ஓட்டுநா்கள் மீது போலீஸாா் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.