மதுரை

குரூப் 1 தேர்வு: மதுரை பெண் 8-ஆவது "ரேங்க்'

DIN

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய துணை ஆட்சியர் பணிக்கான குரூப் 1 தேர்வில் மதுரை ஐஏஎஸ் அகாதெமி மாணவி ஆர்.செளந்தர்யா (24)  8-ஆவது இடம் பிடித்துள்ளார்.
 அவர் திண்டுக்கல்லைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்-ராஜலெட்சுமி தம்பதியின் மகள்.  அவரது தந்தை ரயில்வே பாதுகாப்புப் படையில் உதவி சார்பு ஆய்வாளராகவும், தாயார் ஆசிரியையாகவும் பணியாற்றி வருகின்றனர்.
பிஇ கம்யூட்டர் சயின்ஸ் முடித்துள்ள செளந்தர்யா, குடிமைப் பணி தேர்வுக்குத் தயாராகி வருகிறார். இதற்கிடையே அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 1 தேர்வில், முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று 8-ஆவது ரேங்க் பெற்றிருக்கிறார்.
 இதுகுறித்து மதுரை ஐஏஎஸ் அகாதெமி இயக்குநர் டி.ராஜராஜன் கூறுகையில்,  போட்டித் தேர்வுகள் என்றால் சென்னைக்கு தான் செல்ல வேண்டும் என்ற நிலை இருந்தது. தற்போது மதுரை போன்ற நகரங்களிலும் பயிற்சி பெறுவர்கள் பல பணிகளுக்குத் தேர்வாகி வருகின்றனர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

SCROLL FOR NEXT