மதுரை

துணை மருத்துவப் படிப்புகள்: மதுரை மருத்துவக் கல்லூரியில் 624 விண்ணப்பங்கள் விநியோகம்

DIN

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் துணை மருத்துவப் படிப்புகளுக்கு 624 விண்ணப்பங்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில் செவிலியர், மருந்தாளுநர், இயன்முறை மருத்துவம்(பிஸியோதெரபி) உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கு 8 ஆயிரம் இடங்கள் உள்ளன. இவற்றுக்கு மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் சார்பில் கலந்தாய்வு நடத்தி மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இந்தப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது. இதில் சென்னை மருத்துவக்கல்வி இயக்குநரகத்தில் இருந்து மதுரை அரசு மருத்துவக் கல்லூரிக்கு 2,300 விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டிருந்தன.
முதல் நாளான திங்கள்கிழமை 626 விண்ணப்பங்கள் மாணவ, மாணவியருக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. இதில் 426 விண்ணப்பங்கள் பொதுப்பிரிவினருக்கும், 200 விண்ணப்பங்கள் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கும் வழங்கப்பட்டுள்ளன. ஆக.23-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஒப்படைக்க ஆக.24- இறுதி நாள்என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

SCROLL FOR NEXT