மதுரை

குடிநீர் கோரி சாலை மறியல்

DIN

உசிலம்பட்டி அருகே திங்கள்கிழமை குடிநீர்  கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 குருவிளாம்பட்டியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதிக்கு 4 மாதங்களாக குடிநீர் சீராக விநியோகம் செய்யப்பட வில்லை. இதுகுறித்து பலமுறை மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. இதையடுத்து பொதுமக்கள் உசிலம்பட்டி- பேரையூர் பிரதான சாலையில் குருவிளாம்பட்டி விலக்கில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த உசிலம்பட்டி ஒன்றிய ஆணையர் இளங்கோ மற்றும் அதிகாரிகள் மறியல் செய்தவர்களிடம்  பேச்சுவார்த்தை நடத்தினர். இரு தினங்களில் இப்பகுதிக்கு சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். இதனால் இப்பகுதியில் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுங்கச்சாவடி கட்டணத்தை பணமாக வசூலித்தால் அபராதமா?

சஞ்சு சாம்சன் விக்கெட் குறித்து சங்ககாரா கூறியது என்ன?

மெட் காலாவில் சஹீரா!

விழுப்புரம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் செயலிழப்பு!

தமிழ்ப் புதல்வன் திட்டம் ஜூலையில் தொடங்கப்படும்: தலைமைச் செயலாளர்

SCROLL FOR NEXT