மதுரை

வில்லாபுரம் தெருக்களில் கழிவுநீர் தேங்கிக் கிடப்பதை கண்டித்து சாலை மறியல்

DIN

மதுரை வில்லாபுரத்தில் தெருக்களில் கழிவுநீர் ஓடுவதை அப்புறப்படுத்தக் கோரி அப்பகுதியினர் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 மதுரை மாநகராட்சி 62 ஆவது வார்டுக்குள்பட்ட பகுதி மீனாட்சி நகர்.  இங்குள்ள மார்கன் தெருவில் கடந்த சில நாள்களாக  கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் சாலையில் தேங்கிக் கிடக்கிறது. இதனால் குடிநீர்  குழாய்களிலும்  இந்த கழிவுநீர் கலக்கிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.  இதனைக் கண்டித்து இப்பகுதியினர் 100-க்கும் மேற்பட்டோர் வில்லாபுரம் ஆர்ச் பகுதி, மதுரை- காரியாபட்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.  உடனடியாக அங்கு வந்த உதவி ஆணையர்  முத்துக்குமார், அவனியாபுரம் காவல்  ஆய்வாளர் நல்லூ ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  அப்போது கழிவுநீர் தேங்குவது சரி செய்து தரப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் உறுதியளித்தன் பேரில் மறியல் கைவிடப்பட்டது. இந்த மறியலால் அப்பகுதியில்  45 நிமிடம்  போக்குவரத்து பாதித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய பிரதேசம்: 4 சாலை விபத்துகளில் 9 போ் உயிரிழப்பு

வட மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்

நெல் கொள்முதல் லஞ்சத்தை எதிா்த்தோரை கைது செய்வதா?: அன்புமணி கண்டனம்

பாய்மர வீராங்கனைக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

டெக் மஹிந்திரா நிகர லாபம் 41% சரிவு

SCROLL FOR NEXT