மதுரை

கூடல்நகர் சந்தையில் எடை குறைவாக விற்பனை: எடைக் கற்கள், மின்னணு தராசுகள் பறிமுதல்

DIN

மதுரை கூடல்நகர் வாரச் சந்தையில் எடை குறைவாக விற்பனை செய்வதற்குப் பயன்படுத்திய மின்னணு தராசுகள், எடைக் கற்களை தொழிலாளர் துறையினர் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.
 கூடல்நகரில் திங்கள்கிழமை தோறும் நடைபெறும் வாரச் சந்தையில் காய்கறி உள்ளிட்ட பொருள்கள் எடை குறைவாக விற்கப்படுவதாக தொழிலாளர் நலத் துறையினரின் செல்லிடப்பேசி செயலியில் புகார் பெறப்பட்டது.
  இதையடுத்து மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் உத்தரவின் பேரில், மதுரை தொழிலாளர் ஆய்வாளர் சு.பா.சாந்தி தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீஸார் அடங்கிய குழுவினர் கூடல்நகர் சந்தையில் திங்கள்கிழமை சோதனை நடத்தினர்.
  இதில் மின்னணு தராசுகளில் எடையைக் குறைத்து அளவீடு செய்து பயன்படுத்தியது கண்டறியப்பட்டது. ஏறத்தாழ 40 மின்னணு தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதே போல, பல்வேறு கடைகளிலும் இருந்த எடைக் கற்களைச் சோதனையிட்டதில் எடைக் குறைவு கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு கிலோ எடைக் கற்களை சோதனையிட்டதில் 700 கிராம் முதல் 750 கிராம் வரை மட்டுமே இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த எடைக்கற்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

SCROLL FOR NEXT